பாடல் 31- குலப் பகையும் அடிமை வாழ்வும் Up
அடிகள் 1-82 : உந்தமோ தனது சகோதரன் கலர்வோ என்பவனுக்கு
எதிராகப் போர்த்தொடுத்து அவனையும் அவனுடைய படையையும்
அழிக்கிறான். கலர்வோவின் இனத்தில் கர்ப்பவதியான ஒரு பெண்
மட்டுமே உயிர்வாழ விடப்படுகிறாள். அழைத்துச் செல்லப்படும்
அந்தப் பெண்ணுக்கு உந்தமோவின் தோட்டத்தில் குல்லர்வோ
என்ற மகன் பிறக்கிறான்.
அடிகள் 83-202 : குல்லர்வோ தொட்டிலில் இருக்கும் பொழுதே
உந்தமோவைப் பழிக்குப்பழி வாங்கத் தீர்மானிக்கிறான். உந்தமோ
குல்லர்மோவைக் கொல்லப் பலவழிகளில் முயன்றும் அம்முயற்சிகள்
பலனளிக்கவில்லை.
அடிகள் 203-374 : குல்லர்வோ வளர்ந்ததும் உந்தமோவுக்குப்
பலவழிகளிலும் தொல்லை தருகிறான். அலுத்துப் போன உந்தமோ
குல்லர்வோவை இலமானனுக்கு அடிமையாக விற்று விடுகிறான்.
வளர்த்தாள் கோழி வளர்குஞ் சொருதாய்
ஒருபெருங் கூட்டம் உயரன் னங்களை
கோழிக் குஞ்சுகள் வேலியில் வைத்தாள்
அன்னங் களையெடுத்(து) **ஆறு கொணர்ந்தாள்;
அங்கொரு கழுகுவந் தவற்றைப் பிடித்தது
கருடன் வந்து சிதறிடச் செய்தது
கவின்சிறைப் பறவை கலையச் செய்தது:
கடத்திய தொன்றைக் *கர்யா லாவுக்(கு)
ஒன்றைக் கொணர்ந்தது ரஷ்ய மண்ணிடை
வீட்டொடு மூன்றா வதையது விட்டது. 10
ரஷ்ய நாட்டுக் குடன்கொடு சென்றது
வர்த்தக மனிதனாய் வளர்ந்தது அங்கே;
கர்யலா வுக்குக் கடத்திச் சென்றது
*கலர்வோ வாக கவினுற வளர்ந்தது;
வீட்டோ டிருக்க விட்டுச் சென்றது
*உந்தமோ வாக உயர்ந்து நிமிர்ந்தது
தினமெலாம் பிதாவின் தீயவன் அவனே
அன்னையின் உளத்தை அவனே உடைப்பவன்.
உந்தமோ வித்து உயர்வலை பரப்பினன்
மீன்களைக் கலர்வோ விரும்பிப் பிடிப்பிடம்; 20
வந்தவன் கலர்வோ வலைகளைக் கண்டனன்
மீன்களைத் தன்பை மிகச்சேர்த் திட்டனன்;
வீரமும் வலிமையும் மிகுந்தவன் உந்தமோ
அவன்சினங் கொண்டனன் ஆத்திரப் பட்டனன்
விரல்களி லிருந்தே விறற்போர் தொடங்கினன்
உள்ளங்கை அருகினால் உறுபோர் கேட்டனன்
மீன்குட லால்ஒரு மிகுபோர்க் கெழுந்தனன்
பொத்தநன் னீர்மீனால் பெருத்தபோ ரொன்றுக்(கு).
செய்தனர் கலகம் செருத்துப் பார்த்தனர்
ஒருவரை ஒருவர் உறவென் றிலராம் 30
எவன்மற் றவனை ஓங்கி அடித்தானோ
அவனே கொடுத்ததை அதன்பதில் பெற்றனன்.
இதற்குப் பின்னர் இன்னொரு வேளை
இரண்டு மூன்றுநாள் ஏகிமுடிந்த பின்
கொஞ்சம் கலர்வோ **கூலம் விதைத்தான்
உந்தமோ வாழ்ந்த ஓல் லின்பின்.
உந்தமோ தோட்டத் துரம்பெறும் செம்மறி
கலர்வோ தானியக் கதிரைத் தின்றது
கலர்வோ பயங்கரக் கடிநாய் அப்போ
உந்தமோ செம்மறி உடலம் கிழித்தது. 40
உந்தமோ பின்பய முறுத்திட லாயினன்
கலர்வோஓர் வயிற்றில் கனிந்த சோதரனை
சொன்னான் கலர்வோ சுற்றம் கொல்வதாய்
அடிப்பதாய்ப் பொதாய் அடிப்பதாய்ச் சிறிதாய்
அனைத்து இனத்தையும் அழிப்பதாய் மாய்ப்பதாய்
இல்களைச் சாம்பராய் எத்து முடிப்பதாய்.
மனிதான் பட்டியில் வாள்களைச் செருகினன்
ஆயுதம் தந்தனன் அவன்மற வோர்கரம்
சிறுவர்கள் பட்டியில் சேர்ந்தகுத் தூசிகள்
அழகிய தோள்களில் அபுல் வாள்களும்; 50
பொதிலும் பொதாம் பெரும்போர்க் கேகினர்
கூடிப் பிறந்தவர் குறையில்சோ தரனுடன்.
கலர்வோ(வின்) மருமகள் கவினுறு மொருத்தி
அமர்ந்து சாரளத் தருகினில் இருந்தனள்
சாரளத் தூடாய்த் தான்வெளிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அங்கே தடித்த அதுவென்ன புகையாய்
அல்லது நிறத்தில் அதுகரு முகிலோ
தொலைவிலே தொயும் தொடர்வயல் வெளிகளில்
புதிய ஒழுங்கையின் புறக்கடை முடிவினில்?" 60
ஆயினும் அதொன்றும் புகாரான புகாரல்ல
அல்லது தடிப்புறும் புகையுமே அல்லவாம்:
அங்ஙனம் தொந்தனர் உந்தமோ வீரர்கள்
புறப்பட்டு வந்தனர் போர்பொ துக்கென.
வந்தனர் உந்தமோ என்பவன் வீரர்கள்
வாள்பட்டி யதிலுறும் மனிதர்கள் சேர்ந்தனர்
கலர்வோ(வின்) கூட்டத்தைக் கடிதுகீழ் வீழ்த்தினர்
பொதான இனமதைப் பொதுகொன் றழித்தனர்
இல்களைச் சாம்பராய் எத்தவர் முடித்தனர்
மாற்றியே அமைத்தனர் வரவெ(ற்)று நிலமதாய். 70
கலர்வோவின் ஒருத்தியே காகை மிஞ்சினாள்
அவளுக்கு வயிறதோ அதிகனத் திருந்தது
உந்தமோ என்பவன் உறுவீர ரப்போ(து)
தம்முடன் வீட்டிடைத் தையலைக் கொணர்ந்தனர்
சிறியதாம் ஓர்அறை செய்யவும் சுத்தமாய்
தரையினைப் பெருக்கியே தான்கூட்டி வைக்கவும்.
சிறுகாலம் மெதுவாகச் சென்றிட லானது
சிறியதோர் பையனாய் ஒருசேயும் பிறந்தது
மகிழ்ச்சியே இல்லாத மங்கையவ் வன்னைக்கு;